கார் விபத்து- 4 மாதத்தில் நிகழ்ந்த 2வது துயரம்! மனைவி மகனை இழந்து திமுக எம்எல்ஏ வேதனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்கலா என்ற பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில், காரில் இருந்து ஓசூர் எம்.எல்.ஏவின் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்களில் ஒருவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் ஓசூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான பிரகாஷின் மகன் கருணாசாகர் என்பது தெரியவந்தது.
திமுக எம்.எல்.ஏ. பிரகாஷின் மனைவி சிவம்மா உடல்நலக்குறைவால் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி காலமானார்.
இவரது மனைவி காலமாகி 4 மாதங்களே ஆன நிலையில் தற்போது இவரது மகனும் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கேட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.