ஓசூரில் மாநகராட்சி ஆணையர் இருக்கையில் அமர்ந்த திமுக எம்.எல்.ஏவால் சர்ச்சை
தமிழகத்தில் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக அமைச்சர்களின் தலைமையில் குழுவை அமைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் ஒசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் பங்கேற்றிருந்தார்.
அப்போது ஆணையாளர் செந்தில் முருகன் அவர்கள் அமரக்கூடிய இருக்கையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்கள் அமர்ந்துக்கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகளை நடத்தி உத்தரவிடுவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் மக்கள் பிரதிநிதி என்றாலும், மாநகராட்சியை நிர்வகிக்க கூடிய ஆணையாளரின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு அதிகாரிகளை விசாரிப்பதும், பணிகளை மேற்க்கொள்ள உத்தரவிடுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.