திமுக சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி இல்லை - ஓவைசி குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது அதனை திமுக ஆதரிக்கவில்லை என அகில இந்திய மஜ்ஜிலீஸ் கட்சியின் தலைவர் ஓவைசி குற்றச்சாட்டு. வேலூர் மாவட்டம், வேலூர் மாங்காய் மண்டி அருகில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் அமமுக, தேமுதிக, எஸ்டிபி. ஐ. மஜ்ஜிலீஸ் கட்சி உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டம் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அகில இந்திய மஜ்ஜிலீஸ் கட்சியின் தலைவர் ஓவைசி பேசுகையில், திமுகவும் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சியில் இருந்தது. முஸ்லீம் சிறுபான்மை மக்கள் 7 சதவிகிதம் உள்ளனர். ஆனால் திமுகவின் காரணமாக பலர் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
பலர் கல்வியை பாதியில் நிறுத்தியுள்ளனர். இவ்வளவு பிரச்சணை உள்ளது. ஆனால் பாஜகவை குறிவைத்து மட்டுமே பேசினார்கள் இவைகளுக்கு திமுகவும் ஒரு காரணம் தான்.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ளது. ஆனால் மகராஷ்டிராவில் காங்கிரஸ் சிவசேனாவுடன் கூட்டணி வைத்து சிறுபான்மைகளுக்கு எதிராக செயல்படுகிறது. அவ்வாறு இருக்க திமுக கூட்டணியில் எவ்வாறு சமூகநீதி இருக்க முடியும். குடியுரிமை திருத்த சட்டம் மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக மட்டும் வாக்களிக்கவில்லை.
வாக்கெடுப்பின் போது திமுகவும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது நான் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது எனக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
ஆனால் திமுகவும் சிறுபான்மையினரை ஆதரிக்காமல் செயல்பட்டது. நாங்கள் பாஜகவை மறைமுகமாக ஆதரிப்பதாக பொய் பரப்புரை செய்து வருகின்றனர். அதனை எல்லாம் நம்ப வேண்டாம் திமுகவை நம்பாதீர்கள். அமமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்” எனப் பேசினார்