தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது... சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை
தமிழக அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் 'திராவிட மாயை' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு புத்தகததை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று என்றும், அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் 90 சதவீத அமைச்சர்களுக்கு ஆங்கிலத்தில் பேசக்கூட முடியாதவர்கள்.இவர்களை விமானம் மூலம் ஏற்றி விட்டால் கூட ஆங்கிலம் தெரியாததால் தமிழ்நாட்டிற்கான ஒரு பைசா நிதியை கூட அவர்களால் வெற்றிபெற முடியாது எனவும் சரமாரியாக அண்ணாமலை விமர்சித்தார்.
அதேபோல் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு மைல் கல்லாக இருக்கப் போகிறதுஎனவும், பாஜகவை நோக்கி மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருகிறார்கள்எனவும் அவர் தெரீத்துள்ளார். அதேசமயம் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.