குடியரசு தின தேநீர் விருந்து - புறக்கணித்த கூட்டணி கட்சிகள்..என்ட்ரி கொடுத்த அமைச்சர்கள்..!
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
புறக்கணிப்பு
தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அண்மையில், மகாத்மா காந்தி குறித்து அவர் பேசிய கருத்துக்கள் கடும் விமர்சனங்களை தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து பெற்றது.
அதனை தொடர்ந்தே ஆளுநர் மாளிகையில் வழங்கப்படும் தேநீர் விருந்தில் பங்கேற்பதை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி போன்றவை அறிவித்திருந்தன.
திமுக அமைச்சர்கள்
இன்று மாலை நடைபெற்று விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதே போல, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா, பாஜகவின் வானதி சீனிவாசன், கரு.நாகராஜன், பாமகவின் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.