ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சரை வீழ்த்திய தவெக

DMK
By Fathima May 05, 2026 02:31 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சரை வீழ்த்தியுள்ளது தவெக.

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், திமுக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றனர்.

அதாவது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் தோல்வியை சந்தித்துள்ளார்.

2021ம் ஆண்டு அமைந்த திமுக அமைச்சரவையில் முதலில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராகவும், பின்னர் கூட்டுறவு துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சரை வீழ்த்திய தவெக | Dmk Minister Lost In One Vote