முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் காந்தி சர்ச்சை பேட்டி

tamilnadupolitics ministergandhi dmkministergandhi hosurpressmeet electioncampaign
By Swetha Subash Feb 10, 2022 07:35 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

“காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வந்ததாக எடப்பாடி கூறுகிறார், ஆனால் திமுக ஆட்சியிலோ, அம்மா ஆட்சியிலோ நீட் வந்ததா? இல்லையே. அட முட்டாளே! நீதானே நீட்டை கொண்டு வந்தாய்” என ஓசூரில் அமைச்சர் காந்தி சர்ச்சை பேட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒசூர் மாநகர திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது.

இதில் கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி அவர்கள் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

வேட்பாளர்கள் அனைவரும் அமைச்சர் காந்தி காலில் விழுந்து ஆசிப்பெற்றனர்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்,

"திமுக 505 பொய் வாக்குறுதிகளை சொன்னதாக ஓபிஎஸ் பேசியது குறித்த கேள்விக்கு,

பொய் வாக்குறுதிகளை நாங்கள் வழங்கவில்லை. சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வது தான் திமுக ஆட்சி. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த நீங்கள், மக்களுக்கு 4000 ரூபாய் கொடுத்தீர்களா என கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நீட் தேர்வை காங்கிரஸ் கட்சித்தான் கொண்டு வந்ததாக கூறுகிறார்.

காங்கிரஸ் கொண்டு வந்ததாக இருக்கட்டும் திமுக ஆட்சியிலோ அல்லது அம்மா ஆட்சியிலோ நீட் தேர்வு வந்ததா? இல்லையே. அட முட்டாளே நீதானே கொண்டுவந்தாய் என எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தை விமர்சித்தார்.

மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு, முயற்சிதான்.. ஜல்லிக்கட்டு போராட்டம் போல முயற்சி மேற்கொண்டால் தான் முடியும்” என கூறினார்.