கீழடி அருங்காட்சிய பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

evvelumeetspress kizhadimuseum dmkministerevvelu
By Swetha Subash Mar 25, 2022 10:57 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

கீழடி அருங்காட்சிய பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்றுவரும் அருங்காட்சிய பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி,

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கீழடி அருங்காட்சிய பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி | Dmk Minister Ev Velu Talks About Kizhadi Museum

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு,

தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்லும் கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்த ரூபாய் 11 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக பணிகள் வரும் மே 31-ம் தேதிக்குள் நிறைவடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் 15% விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும்,

முதல்வரின் நம்மை காப்போம் 48 என்ற திட்டத்தின் படி கடந்த மூன்று மாதங்களில் சாலை விபத்தில் சிக்கிய 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை கணக்கெடுக்கும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்,

முடிவுகள் கிடைக்கப் பெற்றவுடன் மத்திய அமைச்சரை சந்தித்து கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைசசர் எ.வ.வேலு தெரிவித்தார்.