திமுகவிற்கு குளிர், ஜுரம் தொடங்கிவிட்டது...யாரும் தப்பிக்க முடியாது : பாஜக அண்ணாமலை எச்சரிக்கை
தர்மபுரியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டார்.
திமுக பாஜக பயணம்
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இருபது மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 செய்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
திமுக ஜாதி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகிறது. கொள்கையில்லாத திமுகவுடன் ஒருபோதும் பாஜகவின் பயணம் இருக்காது.
குளிர் ஜுரம் தொடங்கிவிட்டது
பாஜகவை கிண்டல் செய்யும் திமுக தன்னுடன் கூட்டணியில் உள்ள ஸ்டெப்னிகளை கழட்டி விட்டுவிட்டு 2024 மக்களவைத் தேர்தலில் எங்களுடன் மோதட்டும் என சவால் விடுத்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஸ்டாலினுக்கு பாஜகவை பார்த்து குளிர் ஜுரம் தொடங்கிவிட்டது. திமுக அமைச்சர்கள் ஒருவரையும் நான் விடமாட்டேன். என்னிடம் இருந்து அவர்கள் யாரும் தப்பிக்க இயலாது. அவர்கள் செய்த ஊழல்களுக்கு கணக்கு கேட்பின் என தெரிவித்துள்ளார்.