கோவில் நிலங்களில் குடியிருந்தால் வாடகை வசூல் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி!

Minister Dmk
By Thahir Jun 21, 2021 01:27 PM GMT
Report

சென்னை ரிப்பன் மாளிகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் ஆர்ட் ஆஃப் லிவ்விங் என்ற தனியார் நிறுவனம் சார்பில் 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களில் குடியிருந்தால் வாடகை வசூல் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி! | Dmk Minister

"இன்று ஆர்ட் ஆஃப் லிவ்விங் என்ற தனியார் நிறுவனம் சார்பில் 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி இடம் கொடுக்கப்பட்டது அது மட்டுமின்றி மளிகை பொருட்களும் மாநகராட்சி இடம் கொடுக்கப்பட்டது. தமிழக அரசு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஒரு நாளுக்கு 4000 , 5000 மாக இருந்த கரோனாவை தற்போது 400,500 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் தினமும் 1 டன் கழிவு மட்டுமே அகற்ற பட்டு வந்தது நிலையில் தீவிர தூய்மை திட்டத்தின் கீழ் தற்போது 250 மெட்ரிக் டன் கடந்த ஒரு வாரத்தில் அகற்றப்பட்டுள்ளது. மழைக்காலம் வருவதால் அனைத்து கால்வாய் சுத்தம் செய்யபட்டு வருகிறது. 3 வது அலைக்கு 8000க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செரியுட்டிகள் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை எளியவர்களை வாடகைதாரர்கள் ஆக முதலில் மாற்றி - இந்து அறநிலையத்துறையின் 78வது சட்டத்தின்படி அவர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை வாடகைதாரர்கள் ஆக மாற்றி அதன் பின்பு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் கொரோன தொற்று குறித்து குளறுபடி அதிமுக கட்சியில் உள்ளது. குறை சொல்வது பழனிசாமி தான் . தமிழக அரசு தற்போது எல்லாத்திலும் வெளிப்படையாக உள்ளது" என தெரிவித்தார்.