திமுக பொதுக்கூட்டத்தில் அத்துமீறல்; கதறி அழுத பெண் போலீஸ் - மன்னிப்பு கேட்ட திமுகவினர்

DMK Chennai Sexual harassment Tamil Nadu Police
By Thahir Jan 03, 2023 04:50 AM GMT
Report

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுகவைச் சேர்ந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அனுப்பி வைத்தனர்.

திமுக பொதுக்கூட்டம் 

விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

DMK members sexually harassed female police

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ஏராளமான திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மேடையில் தலைவர்கள் பேசி கொண்டிருந்த போது மது போதையில் சில நிர்வாகிகள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை - கதறி அழுத பெண் போலீஸ் 

இதையடுத்து அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் அவர்களை கண்டித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த 2 இளைஞர்கள் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறியதை உணர்ந்த பெண் போலீஸ் கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து அருகே இருந்த போலீசார் ஒருவரை பிடித்த நிலையில், மற்றொருவர் தப்பியோடினார். அவரை விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

மன்னிப்பு கேட்டதால் விடுவிப்பு 

இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகளை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

பெண் போலீசுக்கு திமுகவைச் சேர்ந்த இருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் அவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி கொண்டு திருப்பி அனுப்பினர்.