பிரபல ரவுடி மற்றும் திமுக நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை - பரபரப்பு சம்பவம்!
தி.மு.க நிர்வாகி மற்றும் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகி
திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி மாணவர் அணியின் துணை அமைப்பாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
இவர் திண்டுக்கல்லில் உள்ள வ.உ.சி பகுதியில் வசித்து வருகின்றனர், இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கொடூரம்
இந்நிலையில், இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் செந்தின்று கொண்டிருந்தார். அப்பொழுது காரில் வந்த மர்ம நபர்கள் பட்டறை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி அவரை நடுரோட்டியில் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்த சமையத்தில் இன்று அருப்புக்கோட்டை ஜூடிசியல் கோர்ட்டில் ஆசிப் முகமது, முகமது மீரான், கலீல் அகமது, சதாம் உசேன், முகமது இர்ஃபான், சக்தி மகேஸ்வர், முகமது அப்துல்லா, சேக் அப்துல்லா ஆகிய 8 பேர் சரணடைந்துள்ளனர்.