சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!
Police
DMK
Murder
Chennai
Member
Enquiry
By Thahir
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முக்கிய இடங்களில் ஒன்று பிராட்வே பேருந்து நிலையம் மிகுந்த பரபரப்பாக காணப்படும் இடம்.
இந்நிலையில் அந்த பகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்காக தண்ணீர் கொண்டு வந்த போது அடையாளம் தெரியாத கும்பலால் சவுந்தரராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.