திருத்தணியில் தி.மு.க. உறுப்பினர் வெட்டி படுகொலை

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Aug 09, 2022 08:16 AM GMT
Report

தி.மு.க பிரமுகரான மோகன் என்பவர் மர்ப நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

திமுக பிரமுகர் வெட்டி படுகொலை 

திருத்தணியில் அரங்கேறிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணியில் வசித்து வருபவர் மோகன். இவர் தி.மு.கவில் உறுப்பினராக இருந்து வந்தார்.

மோகன் நேற்று வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து மூன்று பேர் கொண்ட மர்ப நபர்கள் சென்றுள்ளனர்.

திருத்தணியில் தி.மு.க. உறுப்பினர் வெட்டி படுகொலை | Dmk Member Murder

அந்த மர்ப நபர்கள் தீடிரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு மோகனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.