கடை ஊழியரை கல்லால் அடிக்க முயன்ற திமுக பிரமுகர்...
மயிலாடுதுறையில் மதுபோதையில் திமுக பிரமுகர் ஒருவர் கடை ஊழியரை கல்லால் அடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வண்டிக்காரத் தெருவில் முகமது அபூபக்கர் என்பவர் காலணி கடை நடத்தி வருகிறார் . கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களாக கடை மூடி இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடையைத் திறந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்த நிலையில் அப்போது அங்கு வந்த திமுக பிரமுகர் ஜனதா பாலு புதிதாக காலனி ஒன்றை வாங்கியுள்ளார்.
பின்னர் கடை உரிமையாளர் பணம் கேட்டதற்கு மதுபோதையில் இருந்த திமுக பிரமுகர் பணம் தர மறுத்துள்ளார். மேலும் கடைக்கு வெளியே வந்து உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அருகிலிருந்த கடைக்காரர் வந்து சமாதானம் செய்துள்ளார்.
ஆனால் திமுக பிரமுகர் அருகிலிருந்த செங்கல்லை கொண்டு கடை ஊழியரை அடிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.