சாராயம் விற்ற காசில் திமுக முப்பெரும் விழா - சீண்டும் அண்ணாமலை!
சாராயம் விற்ற காசில்தான் தி.மு.க. முப்பெரும் விழா நடந்துள்ளது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முப்பெரும் விழா
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு பாஜக தொண்டர்கள் பாடுபடுவார்கள். அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுவருகிறோம். காங்கிரஸ் கட்சியை எடுபிடி கட்சி என்று பெயர் மாற்றலாம்.
திமுகவுக்கு எடுபிடியாக செயல்படும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். என்னுடைய வளர்ச்சி சிலரின் கண்ணை உறுத்துது, கெட்டவன் என்று நான்கு பேர் குரைத்தால், நல்லவர் என்று 40 பேர் பாராட்டுகிறார்கள்.
சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல குரைத்து கொண்டே இருக்கட்டும். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரையும் நேரில் சந்தித்துப் பேசுவேன். பாஜக கஷ்டத்தில் இருந்தபோது டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அவர்களும் உடன் இருந்தார்கள்.
அண்ணாமலை விமர்சனம்
அரசியல் வேறு, கூட்டணி வேறு, நட்பு வேறு. அதிமுகவை காப்பாற்றியது பா.ஜ.க தான் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொல்வது சரித்திர உண்மை. எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர் முகத்தை மறைத்ததாக நான் பார்க்கவில்லை. வீடியோவில் அப்படி தெரிந்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண் குதிரை மீது அமர்ந்து காவிரிக்கு செல்கிறார். முதலில் கண்ணாடியில் தன்னை முதல்வர் பார்க்க வேண்டும்.
திமுக முப்பெரும் விழா சாராய காசில் நடத்தப்பட்ட விழா. செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன மு.க.ஸ்டாலின், இன்று பாராட்டுகிறார்.
ஊழல் பட்டம் தரப்பட்ட செந்தில் பாலாஜியை வைத்து திமுக முப்பெரும் விழாவை நடத்தியுள்ளது.” என விமர்சனம் செய்துள்ளார்.