சென்னையில் பயங்கரம்: திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொலை
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தில் 188வது திமுக வட்ட செயலாளராக பதவி வகித்து வந்த செல்வம் என்பவர் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 188வது வட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட இருந்தார்.
இந்நிலையில் அவரை மர்ம கும்பல் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் இந்த படுகொலைக்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.