234 தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர்
2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும் என தெரிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
செங்கல்பட்டு திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது,
2021ல் இருந்ததை விட நமக்கான வரவேற்பு மக்களிடம் அதிகரித்துள்ளது, 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும்.
5 ஆண்டில் நிறைவேற்றிய திட்டங்களே 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை வழிநடத்துவதற்கான புளூ பிரிண்ட்.

சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாததையும் நிறைவேற்றியுள்ளோம். சென்னையும், வடதமிழ்நாடும் திமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.
உங்கள் ஒதுக்கப்பட்ட 100 வாக்காளர்களை 5 முறை அணுகி, அரசின் சாதனைகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும்.
எந்த தொகுதி யாருக்கு ஒதுக்கப்பட்டாலும் 234 தொகுதியிலும் இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என நினைத்துப் பணியாற்றுங்கள். கூட்டணி கட்சிகளுடன் ஒற்றுமையாக பணியாற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.