சுட சுட தயாராகும் விருந்து - திமுக இளைஞர் மாநாடு சாப்பாடு மெனு கவனிச்சிங்களா..?
இன்று நடைபெறும் இளைஞர் அணி மாநில மாநாட்டில் தயாராகும் சாப்பாடு வகை மெனு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு
திமுகவின் 2-வது இளைஞர் அணி மாநாடு இன்று சேலம் ஆத்தூரை அடுத்த பெத்தநாயகம்பாளையத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
திமுகவின் தலைவர் முக ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் என பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
சுட சுட சாப்பாடு
இந்நிலையில், இந்த மாநாட்டில் வருவோருக்கு வழங்கப்படவுள்ள சாப்பாடு மெனு குறித்து தகவல் வெளிவந்துள்ளது. 2 லட்ச மட்டன் பிரியாணிகள் மற்றும் சிக்கன் 65 தயாரிக்கும் பணி மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த உணவு தயாரிப்பில் 2000-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இனிப்பு வகையான பிரட் அல்வாவும் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பிரியாணி என்ற அசைவ வகைகள் மட்டுமின்றி சைவ உணவு வகைகளும் சமைக்கப்பட்டு மாநாட்டில் வருவோருக்கு வழங்கப்படவுள்ளது.