வேட்பாளர்கள் பட்டியலில் அதிரடி காட்டிய திமுக! பல்துறை ஆளுமைகள் கொண்டவர்களுக்கு வாய்ப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களைத் தவிர்த்து திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியான நிலையில், இன்று திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
இந்த பட்டியலில் பல்துறை ஆளுமைகள் கொண்ட வேட்பாளர்கள் இடம்பெற்றிருப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அதாவது, திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 9 மருத்துவர்கள், 31 வழக்கறிஞர்கள், 6 முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.