தமிழகத்திலேயே மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தியாகராய நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி
தமிழகத்தில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பதிவான தியாகராய நகர் தொகுதி பதிவாகியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கின. இதன் முடிவில் திமுக கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக முக ஸ்டாலின் தேர்வானார்.
இந்த நிலையில் தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தியாகராய நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ கருணாநிதி 137 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தி.நகர் சத்யா தோல்வியடைந்துள்ளார்.