எம்.பி காலில் விழுந்து கதறிய திமுக பிரமுகர்
வத்தலக்குண்டுவில் நடந்த குறைதீர் முகாமில் தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு நாடாளுமன்ற உறுப்பினரின் காலில் விழுந்து கதறிய தி.மு.க பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, வத்தலகுண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்களிடம் முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி வெளியே சென்றபோது குன்னுவாரன்கோட்டை கிராமம் உச்சப்பட்டியை சேந்த பரமசிவம் என்பவர் தனது தந்தை சிவனாண்டி தேவர் 1974-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
அவரது இறப்பு சான்றிதழை கேட்டு 48 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை என கூறிக்கொண்டே திடீரென நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமியின் காலில் விழுந்து கெஞ்சினார்.
தி.மு.க பிரமுகரான பரமசிவம் தனது தந்தையின் இறப்பு சான்று கோரி அதே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரின் காலில் விழுந்து கதறிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பரமசிவம் தந்தையின் இறப்பு சான்றிதழை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உத்தரவிட்டார்.