ஆபாச வார்த்தையால் பெண்ணை திட்டித்தீர்த்து தாலியை அறுத்து வீசிய திமுக பிரமுகர்
வேலுார் மாவட்டம் அணைக்கட்டு மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் காந்தி. இவரது சகோதரர் சுப்பிரமணி. இவர்களுக்கு சொந்தமாக ஊனை வாணியம்பாடி மதுரா ஏரிபுதுார் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலம் உள்ளது.
திமுக பிரமுகர் மிரட்டல்
அந்நிலத்தை அணைக்கட்டு திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் என்பவர் அபகரித்து விட்டதாக காந்தி மற்றும் சுப்பிரமணி குடும்பத்தினர் வேலுார் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர் அளித்த புகார் மனுவில் ஊனை வாணியம்பாடி மதுரா ஏரிபுதுார் கிராமத்த்தில் எங்களது நிலத்தில் திமுக அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஜேசிபி மூலம் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.
இதை காந்தி மற்றும் சுப்பிரமணியன் மகன்கள், மகள்கள் தட்டி கேட்டுள்ளனர். அப்போது கவிதா என்ற பெண் அணிந்திருந்த தாலியை அறுத்து வீசியுள்ளார்.
மேலும் அங்கிருந்த ஆட்களை வைத்து தாக்கி நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடி ஆட்களை வைத்து குடும்பத்தை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் நிலத்தின் பட்டா மற்றும் வரைப்படம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் புகார் மனு உடன் இணைத்துள்ளதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.