உழைப்பாளர் தினம்: அறிவாலயத்தில் மரியாதை செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின்

Tamil Nadu MK Stalin May Day
By mohanelango May 01, 2021 06:28 AM GMT
Report

இன்று உலகம் முழுவதும் மே 1, உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பதிவில், “#COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் #LabourDay வாழ்த்துகள்! 

என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது.”