வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது: திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து
வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது என திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸுடன் நீடிக்கும் கூட்டணி இழுபறி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்தி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறியில் சென்று கொண்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய திமுக, காங்கிரஸை இதுவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் திமுக கூட்டணி மற்றும் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் நடத்தி வரும் பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி அளித்த நிலையில், அதற்கு குறித்து திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி நோக்கி புதிய கட்சிகள்
அதில், தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்பது வழக்கம் தான், அதே நேரத்தில் திமுக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
முதல்வர் ஸ்டாலினும் ஆட்சியில் பங்கு இல்லை என தெளிவாக கூறிவிட்டார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நிச்சயமாக உள்ளாட்சியில் பங்கு கிடைக்கும்.
அதே நேரத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது, இருப்பினும் திமுக-வை விரும்பு வரும் கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் அரவணைத்து வருகிறார்.
கள எதார்த்தத்தை புரிந்து கொண்டு தான் புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வர விரும்புகின்றனர்./// காங்கிரஸ் பாஜகவிற்கு எதிராக போராட தீவிரமாக முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடிவேலுக்கு வராத கூட்டமா?
40 வயது கீழ் உள்ளவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறுவது கானல் நீர்தான். விஜய்க்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை மட்டுமே உள்ளது. வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?.
திமுக-வை எதிர்ப்பதன் மூலம் மட்டும் முதல்வர் ஆகிவிடலாம் என்று விஜய் கருதுகிறார். விஜய் மக்கள் பிரச்சனைகளுக்காக போராட முன்வருவது இல்லை என்றும் திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.