இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு....திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை
DMK
Death
By Thahir
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர் தங்கவேல் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திமுக பிரமுகர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் (வயது 84), தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே தங்கவேல் உயிரிழந்துவிட்டார். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக அவர் தனது உயிரை மாய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.