முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

passes away dmk head karunanidhi pa sanmuganathan at age 80
By Thahir Dec 21, 2021 10:58 AM GMT
Report

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன்.

இவர், கருணாநிதி உயிரிழக்கும் வரை அவரக்கு உதவியாளராக இருந்தவர்.

அதன்பிறகு, ஓய்வில் இருந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 80. சண்முகநாதனின் மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.