உங்க குடும்பம் எங்கே சார்? - முதலமைச்சர் விஜய் மீது திமுக ஐடி விங் கடும் விமர்சனம்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்கினார்.
அப்போது டாஸ்மாக் ஊழல் குறித்து பேசிய அவர், டாஸ்மாக் கட்சி நிதி என்று குறிப்பிட்டதால் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், தனது உரையின்போது முதலமைச்சர் விஜய் ஒரு குட்டி கதையையும் கூறினார்.

வெயிலில் நின்று எதையோ தேடிக்கொண்டிருந்த வயதான ஒருவரிடம், சிறுவன் ஒருவர் என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் உன் அப்பாவைத் தேடுகிறேன் என்று பதிலளித்ததாகவும் கூறினார்.
இதுபோன்ற சம்பந்தமில்லாத கதைகளை எதிர்க்கட்சிகள் போல தானும் சொல்ல முடியும் என்று முதலமைச்சர் விஜய் விமர்சித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து தற்போது திமுக தொழில்நுட்ப பிரிவு தனது எக்ஸ் தள பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து பதிவு வெளியிட்டுள்ளது.
வெளியிட்ட பதிவு..,
"சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம். அங்கே மிக மலிவாக, சட்டமன்றத்தின் கண்ணியத்தையே குழிதோண்டிப் புதைத்திருகிறார் இந்த 'இன்ஸ்டா அரசன்'!
எதிர்க்கட்சிகளை நக்கல் செய்கிறேன் பேர்வழி என அடுத்தவர் அப்பாவைத் தேடும் C.M சார், நாங்க நேரடியாகவே உங்களுக்கும் உங்க Virtual Abusersக்கும் புரியும் மொழியிலேயே கேட்கிறோம்,
உங்க குடும்பம் எங்கே சார்?
அவர்களை ஏன் இப்படி நடுத்தெருவில் கைவிட்டீர்கள்?
சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம். அங்கே மிக மலிவாக, சட்டமன்றத்தின் கண்ணியத்தையே குழிதோண்டிப் புதைத்திருகிறார் இந்த 'இன்ஸ்டா அரசன்'!
— DMK IT WING (@DMKITwing) June 23, 2026
எதிர்க்கட்சிகளை நக்கல் செய்கிறேன் பேர்வழி என அடுத்தவர் அப்பாவைத் தேடும் C.M சார், நாங்க… pic.twitter.com/8bcLwzLYuL
உங்கள் சொந்தப் பிள்ளைகளின் நண்பர்கள் இன்று, "உங்க அப்பா எங்கடா?" என்று கேட்டால், அந்தப் பிள்ளைகள் என்ன பதில் சொல்வார்கள் என உங்களுக்கு என்றாவது உறைத்திருக்கிறதா?
உங்களது சொந்த மனைவியே, "என் கணவன் இன்னொரு நடிகையோடு தொடர்பில் இருக்கிறார்" என்று கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் அளவுக்குக் கேவலமான நிலையில் உங்களது தனிமனித வாழ்க்கை இருக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
இப்படிப்பட்ட அசிங்கமான பின்னணியை வைத்துக் கொண்டு, எந்த முகத்தோடு சட்டமன்றத்தில் நின்று அடுத்தவர்கள் குடும்பத்தைப் பற்றிக் குட்டிக்கதை சொல்கிறீர்கள்?
மேடைக்கு மேடை 'தனிமனித ஒழுக்கம்' என்று ஊருக்கு உபதேசம் செய்யும் 'சோஃபா மாடல்' முதலமைச்சரே, முதலில் உங்கறது சொந்தக் குடும்பத்தின் வண்டவாளங்களைச் சரிசெய்துவிட்டு, அப்புறம் சட்டமன்றத்தில் வந்து வாய் கிழியப் பேசுங்கள்!" என்று கடுமையாக விமர்சித்துள்ளது.