தினமும் குற்றச்செயல்கள் - கவனிக்கப்படுகிறது -அனைத்திற்கும் எதிர்வினை உண்டு - அண்ணாமலை கண்டனம்

M K Stalin Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Jan 17, 2024 05:37 PM GMT
Report

செய்யும் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை திமுக உணர்ந்திருக்க வேண்டும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை அறிக்கை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப்பதிவில், கட்சிக் கொடியேற்றியதற்காக, பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் செல்வராஜ், திமுக அரசின் தூண்டுதலால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது, தமிழகத்தில் திமுக எத்தனை ஜனநாயக விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

தினமும் குற்றச்செயல்கள் - கவனிக்கப்படுகிறது -அனைத்திற்கும் எதிர்வினை உண்டு - அண்ணாமலை கண்டனம் | Dmk Is Running An Undemocratic Regime Annamalai

தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறும் குற்றச் செயல்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைக் கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கத் திறனற்ற திமுக, தனது சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைக்க, பாஜகவினரைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றுகிறது.

ராமர் கோவில் விழாவிற்கு முன் திடீரென தமிழகம் வரும் பிரதமர் மோடி - என்ன காரணம்?

ராமர் கோவில் விழாவிற்கு முன் திடீரென தமிழகம் வரும் பிரதமர் மோடி - என்ன காரணம்?

எதிர்வினை உண்டு

திமுகவின் இந்த எதேச்சதிகாரப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை திமுக உணர்ந்திருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தினமும் குற்றச்செயல்கள் - கவனிக்கப்படுகிறது -அனைத்திற்கும் எதிர்வினை உண்டு - அண்ணாமலை கண்டனம் | Dmk Is Running An Undemocratic Regime Annamalai

முன்னதாக, தமிழகம் முழுவதும் பாஜகவின் கொடியேற்றப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் காவல்துறையின் அனுமதியில்லாமல் கொடியேற்றும் நிகழ்வுகள் நடைபெற அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.