நீட் தேர்வால் நடக்கும் தற்கொலைகளுக்கு திமுக தான் காரணம் - அண்ணாமலை
நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுக தான் காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை விமர்சனம்
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த மாநில முதலமைச்சர்களும் நீட் வேண்டாம் என எதிர்க்காத போது,
தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் நீட் வேண்டாம் என எதிர்த்து, மாணவர்களின் மன தைரியத்தை உடைத்து வருகிறார்.
நீட் வேண்டாம் என திமுக சொன்னாலும்,தேர்வு இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
டீ மாஸ்டரின் மகள் கூட தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுக தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆரம்ப காலத்தில் நீட் தேர்வில் பிரச்னை இருந்தது உண்மைதான்; ஆனால் தற்போது பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் மாணவ,மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.