திமுக ஒன்றியம் என கூறுவது தேசத்திற்கு எதிரானது: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

dmk againstnation ondriyam
By Irumporai Jul 24, 2021 01:57 PM GMT
Report

திமுக அரசு இந்திய அரசினை ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது என டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் உணவக விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் , திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு கட்டாயமாக நீட் தேர்வு நடத்தப்படும் என கூறியதால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே மாணவர்களிடையே ஏற்படும் குழப்பம் நீங்கும் என கூறினார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவை ஒன்றியம் என அழைப்பது நம்மை நாமே சிறுமைபடுத்துவது போல உள்ளதால் திமுக தங்களது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் ஒன்றிய அரசு என அழைக்கப்படுவது தேசத்திற்கு எதிரானதாக பார்க்கப்பட வேண்டும் என்றார்