திமுக மாநில கட்சி அல்ல...அது குடும்ப கட்சி - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கடும் விமர்சனம்!

M K Stalin Coimbatore DMK BJP K. Annamalai
By Thahir Dec 28, 2022 02:22 AM GMT
Report

திமுக மாநில கட்சி அல்ல...அது குடும்ப கட்சி... மாநில உரிமைகளுக்காக அது எதுவும் செய்யவில்லை என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

நேற்று கோவையில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றார்.

இந்தியா பாதுகாப்பான கையில் உள்ளது

பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,தமிழ்நாடு வளர்ச்சியை பொறுத்தவரை 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 வழிச்சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. 8 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் இருந்து நிறைய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன. ஆனால் உங்களிடம் ஒன்றை கூறிக்கொள்ள நினைக்கிறேன்.

DMK is not a state party...it is a family party

இந்தியா பாதுகாப்பான கையில் உள்ளது. ஆனால், தமிழ்நாடு பாதுகாப்பான கையில் இல்லை... திமுக மாநில கட்சி அல்ல.அது குடும்ப கட்சி. மாநில உரிமைகளுக்காக அது எதுவும் செய்யவில்லை.

திமுக கட்ட பஞ்சாயத்து கட்சி 

மாறாக குடும்பத்திற்கு மட்டுமே செய்கிறது. குடும்பமும் ஒரே ஒரு குடும்பம் தான் சகோதர், சகோதரிகள் கிடையாது.

ஒரே ஒரு குடும்பம் தான். ஆகையால், அது கருணாநிதி மற்றும் குடும்பத்தினர்.. மேலும் இது திமுக. தி என்பது குடும்ப அரசியல்... மு என்பது பணமோசடி... க என்பது கட்ட பஞ்சாயத்து.

DMK is not a state party...it is a family party

தமிழ்நாடு மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை. உங்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

எங்களை பொறுத்தவரை நாடு முதலில், கட்சி இரண்டாவது, குடும்பம் கடைசி. ஆனால், திமுகவை பொறுத்தவரை குடும்பம் முதல், கட்சி இரண்டாவது, நாடு கடைசி.

நாட்டை இணைக்க நாங்கள் (பாஜக) இருக்கிறோம். நாட்டை பிளக்க அவர்கள் (திமுக) இருக்கிறார்கள். எனது கவலை என்னவென்றால் நாடு பாதுகாப்பான கையில் உள்ளது ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கையில் இல்லை. ஆகையால், கையை மாற்றுவது நல்லது' என்றார்.