வேட்டியே அவிழ்ந்தாலும் பரவாயில்லை; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தே ஆகணும் - திமுகவினர் சாலை மறியல்
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற நிலையில், திமுகவினர் திடீரென சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களின் கோரிக்கையை நிராகரித்த அமைச்சர் உதயநிதி
திருவாரூர் மற்றும் நாகை மாவட்டம் திருக்குவளையில் நடைபெற உள்ள சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் திருவாரூர் வந்தார்.
இன்று திருக்குவளையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்று கலந்து கொள்வதற்காக திருவாரூரிலிருந்து திருக்குவளைக்கு காரில் பயணம் மேற்கொண்டார்.
அப்பொழுது திருவாரூர் அருகே குன்னியூர் என்ற பகுதியில் அப்பகுதி திமுகவினரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதற்காக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திமுகவினர் சாலை மறியல்
இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்காத உதயநிதி காரை நிறுத்தாமல் திருக்குவளைக்கு பயணம் மேற்கொண்டார். இருந்த போதும் திமுகவினர் உதயநிதியின் வாகனத்திற்கு பின்னாலே ஓடினர்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அவருக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக நிர்வாகி தனது வேட்டி அவிழ்ந்தாலும் பரவாயில்லை அமைச்சர் உதயநிதி வந்தே ஆக வேண்டும் என்று அவிழ்ந்த வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.பின்னர் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

சொந்தக் கட்சியினரே உதியநிதி ஸ்டாலினுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.