திமுக கூட்டணியில் தேமுதிக? விரைவில் வெளியாகும் அறிவிப்பு

DMK DMDK
By Fathima Feb 02, 2026 04:09 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

NDA கூட்டணியில் டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் இணைந்துள்ளனர், இக்கூட்டணியில் இடம்பெற தேமுதிக அதிக தொகுதிகளை கேட்டதாகவும் அதற்கு தலைமை மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அதே தொகுதிகளை வழங்க திமுக-வும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் தேமுதிக? விரைவில் வெளியாகும் அறிவிப்பு | Dmk In Dmk Alliance Tamil Nadu Election

இதற்கிடையே கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என பிரேமலதா அறிவித்திருந்தார், ஆனால் இதுவரை கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக-வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினரை ஒதுக்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அது நடைபெறவில்லை, இதனால் அதிருப்தியில் உள்ள தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுக கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது.

NDA கூட்டணியில் விஜய்யா? பியூஷ் கோயல் பேட்டி

NDA கூட்டணியில் விஜய்யா? பியூஷ் கோயல் பேட்டி


இதற்காக திமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஐந்து முதல் ஆறு தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது, இது இழுபறியாக இருப்பதால் அடுத்த வாரம் கூட்டணி குறித்த அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் தேமுதிக? விரைவில் வெளியாகும் அறிவிப்பு | Dmk In Dmk Alliance Tamil Nadu Election