காவிரி நீர் விவகாரம்: திமுக செயல்பாடு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்
காவிரி நீர் தமிழகத்திற்கு வருவதைத் தடுக்க கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் இணைந்து திமுக செயல்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் ஒற்றுமை இல்லை
மேலும், முதலமைச்சர் விஜய்க்கு நற்பெயர் கிடைக்கக் கூடாது என்பதற்காக திமுக அரசியல் செய்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவிக்காமல் அதிமுக நீதிமன்றத்தை நாடியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு தமிழகத்தில் அரசியல் ஒற்றுமை இல்லை என்றும், முதலமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது தமிழக மக்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், காங்கிரஸ் தலைமையின் கருத்தைக் காட்டிலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவதையே கேட்பார் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.