திமுகவுக்கு இன்னும் 30 மாதம்தான்.. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை - அண்ணாமலை!

Tamil nadu DMK BJP K. Annamalai
By Jiyath Dec 01, 2023 02:33 AM GMT
Report

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். 

அண்ணாமலை 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் "என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளார்.அவர் நேற்று வேதாரண்யத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுகவுக்கு இன்னும் 30 மாதம்தான்.. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை - அண்ணாமலை! | Dmk Has Only 30 Months Left Bjp Annamalai

மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் வரும் டிசம்பர் 5-ம் தேதி வரை தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை "திமுக ஆட்சிக்கு 30 மாத காலம் இருக்கிறது.அதற்குள் மழைநீர் தேங்கும் பிரச்னையை முழுவதுமாக சரி செய்யவேண்டும்.

மீனவர்கள் பிரச்னை தீரும் 

இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க தமிழக முதல்வர் மட்டுமல்ல நானும் கடிதம் எழுதிவருகிறேன். இலங்கை வசம் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு மத்திய அரசின் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

[

 கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்கள் பிரச்னை தீரும். கச்சத்தீவு நம்மிடம் இல்லாத காரணத்தால் இந்தியா- இலங்கை எல்லை பிரச்னை இருந்து வருகிறது.இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்துள்ளார்.