Wednesday, May 21, 2025

அதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு : கொந்தளித்த ஈபிஎஸ்

ADMK DMK Edappadi K. Palaniswami
By Irumporai 3 years ago
Report

முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என ஈபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.

ரெய்டில் சிக்கிய முன்னள் அமைச்சர்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில், வருமான முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு : கொந்தளித்த ஈபிஎஸ் | Dmk Govt Unable To Directly Politically Eps Tweet

அந்த வகையில்,அவரது நண்பர்கள், உறவினர்கள்,ஆதரவாளர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் 6 இடங்களிலும்,கோவை,தஞ்சாவூர்,திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது இரு மகன்கள் உட்பட மொத்தம் 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இதற்க்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில்.

கொந்தளித்த எடப்பாடி

அஇஅதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன், என பதிவிட்டுள்ளார்.  

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு