பட்டா கிடைக்காமல் காத்திருந்த மக்கள் - அமைச்சர் உதயநிதி கொடுத்த அப்டேட்!
மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
நலத்திட்ட உதவி
சென்னை, புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2,124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் ,'' சென்னை வருவாய் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் வீட்டு மனைப் பட்டா கிடைக்காமல் காத்திருந்த பொதுமக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருந்தார்கள்.
தி.மு.க. அரசு
அதன்பேரில், சென்னை மாவட்டத்தில் மட்டும் வருவாய்த்துறை சார்பில் 28,848 பட்டாக்கள் தயார் செய்யப்பட்டன.அதன் அடிப்படையில் மாதவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 2,124 பயனாளிகளுக்கான வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள் என்பதை நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40க்கு வெற்றி பெற செய்து நிரூபித்து உள்ளீர்கள். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த ஆடை அவசியம். இதனை தி.மு.க. அரசு நிறைவேற்றி தருகிறது" என்று தெரிவித்தார்.