திமுக அரசின் முதல் ’’இ’’ பட்ஜெட் : என்னென்ன அம்சங்கள் இடம் பெறப்போகிறது? எதிர்பார்ப்புகள் என்ன?

dmkgoverment firstbudget
By Irumporai Aug 13, 2021 12:06 AM GMT
Report

தமிழக சட்டசபையில் முதன் முதலாக, காகிதமில்லா 'இ - பட்ஜெட்' இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதில், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டு உள்ளது.

தமிழக அரசின் 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, பிப்., 23ல், அப்போதைய துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்தனட்

தற்போது, தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுள்ளதால்  2021 - 2022ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை, இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நிதி அமைச்சர் தியாகராஜன்,  இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இ பட்ஜெட் என்பதால் ஒளிரும் கணினி திரைஅதேபோல, தமிழக சட்டசபையில் முதன் முறையாக, இன்று காகிதமில்லா இ - பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பட்ஜெட் உரை, வாசிக்கும்  போது கணினி திரையில் ஒளிரும்.

[ 

அதோடு அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், கையடக்க தொடுதிரை (டச்) கணினி வழங்கப்பட உள்ளது.

 இடைக்கால பட்ஜெட்டில், 2021 - 22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன், 5.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது வருவாய் பற்றாக்குறை, 41 ஆயிரத்து 417 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன:

இந்த நிலையில் சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதை நிறைவேற்றும் வகையில், புதிய அறிவிப்புகள்பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அதேபோல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல், 100 நாள் வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக உயர்த்துதல்,

நகர்ப்புறங்களிலும் 100 நாட்கள் வேலைத் திட்டம், முதியோர் உதவித் தொகை- பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் அதிகரிப்பு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு ஆகியவையும் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்களாக இருக்கக் கூடும்.

போக்குவரத்து ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் குறித்தும் நாளைய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெற வாய்ப்புகள் உள்ளன

வேளாண்மை பட்ஜெட்மேலும், அனைத்து துறைகளையும் மேம்படுத்த, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என கருதப்படுகிறது

ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் தொடர நிதி ஒதுக்கப்படுமா அல்லது ஏதேனும் திட்டங்கள் கைவிடப்படுமா என்பதும் இன்று தெரியும்.

அரசின் வருவாயை பெருக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என, நிதி அமைச்சர் தியாகராஜன் ஏற்கனவே கூறியிருந்தார். அந்த திட்டங்கள் என்ன என்பதும் இன்றைய பட்ஜெட்டில் தெரிய வரும்.

இன்று பட்ஜெட் உரையுடன், சட்டசபை நிறைவடையும். நாளை முதன் முறையாக, 2021 - 22ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்