ஆன்லைன் ரம்மி; தமிழகத்தில் 8 உயிர்கள் பலியானதற்கு திமுக அரசு தான் காரணம் - அண்ணாமலை
அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளதற்க்கு திமுக அரசு தான் காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
இந்த சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ஆளுநர் தமிழக அரசுக்கு இச்சட்டம் குறித்து விளக்கம் கேட்டு இருந்தார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சென்று விளக்கம் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஒப்புதல் ஆளுநர் விரைவில் வழங்குவார் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பக்கத்தில், அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என்று திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று கூறியுள்ளார்.
அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாட்கள் இடைவெளி இருந்தது.
அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரும், தமிழக முதலமைச்சரும் தான் பொறுப்பு என்று பதிவிட்டுள்ளார்.
அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது.
— K.Annamalai (@annamalai_k) December 3, 2022
இதற்கு திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரும் @CMOTamilnadu ஆகியோரே பொறுப்பு. (3/3)