இந்த உயிரிழப்புக்கு திறனற்ற திமுக அரசே பொறுப்பு : கொந்தளித்த அண்ணாமலை

Tamil nadu BJP K. Annamalai
By Irumporai Oct 04, 2022 05:47 AM GMT
Report

திறனற்ற திமுக அரசின் ஒத்துழைப்போடு நடைபெறும் மணல் கொள்ளையால் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு இல்லை என அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு, நேற்று முன்தினம், தூத்துக்குடியில் இருந்து, சார்லஸ் (வயது 58) என்பவர் பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19)  உள்பட 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்கள்

அப்போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் 6 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 6 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த உயிரிழப்புக்கு திறனற்ற திமுக அரசே பொறுப்பு : கொந்தளித்த அண்ணாமலை | Dmk Government Is Responsible Annamalai

இதில் 5 பேர் சடலமாக மீட்கப்படடுள்ளனர். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் மூழ்கி மாயமானதாகவும், அதில் இதுவரை மூவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் வரும் செய்தி வேதனை அளிக்கிறது.

அண்ணாமலை ட்வீட்

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள். இது திறனற்ற திமுக அரசின் ஒத்துழைப்போடு நடைபெறும் மணல் கொள்ளையால் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு இல்லை.

ஜூன் மாதத்தில் கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற ஏழு பேர் மணல் கொள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்ட பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது. தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு இந்த திறனற்ற திமுக அரசே பொறுப்பு. என பதிவிட்டுள்ளார்.