‘’ ஆன்மீகத்திற்கு எதிரானது திமுக அரசு அல்ல” – அமைச்சர் சேகர்பாபு
திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு:
அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகரூ.ர்களாக கோயில்களில் நியமிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில்,தமிழ்கத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் அவர்கள் வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல்,அர்ச்சகர் பயிற்சி பெறுவதற்கு வழங்ப்பட்டு வந்த ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் 437 பேரிடம் இருந்து ரூ.1640 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கோயில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும். தமிழக அரசின் அனைத்து நல்ல திட்டங்களையும் பாஜக எதிர்த்து வருகிறது.இதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை செயலாற்ற வேண்டும்,என்று தெரிவித்துள்ளார்.