தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு: யாருக்கு என்ன துறை?

Tamil Nadu Stalin Cabinet Udhayanidhi Stalin
By mohanelango May 06, 2021 10:58 AM GMT
Report

திமுக தலைவர் ஸ்டாலின் நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளனர்.

இதனையடுத்து அமைச்சரவையில் யாருக்கு என்ன இடம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வமாக அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 34 அமைச்சர்கள் நாளை பொறுப்பேற்க உள்ளனர்

மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர், உள்துறை, காவல்துறை மற்றும் இந்திய ஆட்சிப் பணி

துரைமுருகன் - நீர் பாசனத்துறை அமைச்சர்

கே.என்.நேரு - உள்ளாட்சித்துறை அமைச்சர்

ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர்

எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - வேளாண்துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்..ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்

முத்துசாமி - வீட்டு வசதித்துறை அமைச்சர்

பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன் - ஊரக தொழில்துறை அமைச்சர்

எம்.பி சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரத்துறை

கீதா ஜீவன் - சமூக நலத்துறை

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை 

கே.ராமச்சந்திரன் - வனத்துறை

சக்கரபாணி - உணவுத்துறை

வி.செந்தில் பாலாஜி - மின்சாரத்துறை

ஆர்.காந்தி - கைத்தறித்துறை

மா.சுப்ரமணியன் - சுகாதாரத்துறை

மூர்த்தி - வணிகவரித்துறை

சேகர்பாபு - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பழனிவேல் தியாகராஜன் - நிதியமைச்சர்