2வது முறையாக திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்
சென்னையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது , இதில் கட்சியில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் விங்க்ஸ் கன்வென்ஷன் செண்டரில் திமுக பொதுக்குழு கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் 2வது முறையாக திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதே போல் திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுக்குழு தேர்தலில், கழகப் பொதுச்செயலாளராக துரைமுருகன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்