காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளை கேட்க தி.மு.க. குழு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Tamil nadu DMK TVK
By Vinoja Nov 23, 2026 10:07 AM GMT
Report

காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் சார்பில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாதது, தண்ணீர் பற்றாக்குறையால் நெற்பயிர்கள் கருகுவது, வறட்சி நிவாரணம் வழங்கப்படாதது, காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தவறியது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளை கேட்க தி.மு.க. குழு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Dmk Forms Committee To Delta Farmers Grievances

அரசுக்கு எதிராக ஸ்டாலின் விமர்சனம்

மேலும், டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் நேரில் கேட்டறிந்து அரசிடம் எடுத்துச் செல்வதற்காக திருச்சி சிவா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு 2026 நவம்பர் 25ஆம் தேதி முதல் ஒரு வார காலம் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து அறிக்கை தயாரித்து கட்சித் தலைமைக்கு வழங்கும். அதன் அடிப்படையில் கோரிக்கைகள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.