கனிமொழி தலைமையில் திமுக இரண்டாக பிரியும் : அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து

Smt M. K. Kanimozhi ADMK DMK
By Irumporai Jan 24, 2023 05:33 AM GMT
Report

கனிமொழி தலைமையில் திமுக இரண்டாக பிரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.

சி.வி சண்முகம் கருத்து 

கள்ளக்குறிச்சியில் சில நாட்களுக்கு முன்பு அதிமுக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முன்னாள் அதிமுக அமைச்சருகும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் விழாவில் பேசுகையில் ஓ. பன்னீர்செல்வம் பற்றியும் திமுக பற்றியும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

கனிமொழி தலைமையில் திமுக இரண்டாக பிரியும் : அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து | Dmk Former Aiadmk Minister Cv Shanmugam

 சின்னத்தை முடக்க முயற்ச்சி

அதில் ஓ.பன்னீர்செல்வத்தை திமுக தனது கையாளாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டினார். மேலும், இதற்கு முன்னர் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல இந்த இடைத்தேர்தலிலும் சின்னத்தை முடக்க அவர் முயற்சித்து வருவதாக கூறினார்.

திமுக இரண்டாக பிரியும்

மேலும் திமுக பற்றி கூறுகையில், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியானது, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு அணிகளாக பிரித்தது போல, திமுகவிலும் ஒரு பிரிவு ஏற்படும். அங்கு ஏக்நாத் ஷிண்டே போல, அது கனிமொழியாகவோ அல்லது துரைமுருகனாகவோ கூட இருக்கலாம் என்றும் தனது விமர்சனத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்வைத்து பேசினார்.

சிவசேனா போல பிரியும்

மேலும் திமுக பற்றி கூறுகையில், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியானது, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு அணிகளாக பிரித்தது போல, திமுகவிலும் ஒரு பிரிவு ஏற்படும். அங்கு ஏக்நாத் ஷிண்டே போல, அது கனிமொழியாகவோ அல்லது துரைமுருகனாகவோ கூட இருக்கலாம் என்று சிவி சண்முகம் கூறினார்.