மீண்டும் திமுக ஆட்சி: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

Udhayanidhi Stalin
By Fathima Mar 15, 2026 03:39 AM GMT
Report

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

ஆளும் கட்சியான திமுக சார்பில் பல்வேறு மாநாடுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று சென்னையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மீண்டும் திமுக ஆட்சி: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை | Dmk Form Govt Again Udhayanidhi Stalin

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியானது, தொடர்ந்து தேர்தல் வாக்குறுதி குறித்து அறிவிப்புகள் வெளியாகும்.

நான் ஆறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறேன், கழக நிர்வாகிகள், பொதுமக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது.

நிச்சயம் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையிலான குழு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் திமுக ஆட்சி: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை | Dmk Form Govt Again Udhayanidhi Stalin