எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை : காவல்நிலையத்தில் புகார் கொடுத்த திமுகவினர்

DMK
By Irumporai 2 மாதங்கள் முன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாத நிலையில் மருத்துவமனையை காணவில்லை என திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

சர்ச்சையான நட்டா பேச்சு

சமீபத்தில் காரைக்குடியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் 95% முடிக்கப்பட்டுவிட்டதாக பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை : காவல்நிலையத்தில் புகார் கொடுத்த திமுகவினர் | Dmk Followers Complaint About Aiims Madurai

காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத்தலைவர் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிட பணிகள் 95% முடிந்துவிட்டிருப்பதாக கூறினார்.

காவல் நிலையத்தில் புகார்

இது குறித்து தமிழக பாஜகவினர் விளக்கம் அளித்தும், சர்ச்சை ஓயவில்லை இந்த நிலையில்ஜே.பி.நட்டா பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து திமுகவினர் மதுரை ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான இந்த சம்பவங்கள் தொடர் வைரலாகி வருகின்றன.