அமைச்சர்களுக்கு செக்! ஆளுநரிடம் திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களை வழங்கிய அண்ணாமலை

DMK BJP R. N. Ravi Governor of Tamil Nadu K. Annamalai
By Thahir Jul 26, 2023 10:58 AM GMT
Report

திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கியதாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஊழல் ஆதாரங்களை கொடுத்துள்ளோம்

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று, பாஜக மூத்த தலைவர்களுடன், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு RN ரவி அவர்களைச் சந்தித்தோம்.

DMK Files Part 2 documents to the Governor

மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும்,

மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.