தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், தவெக வேட்பாளரான சத்தியபாமாவின் வீடியோ வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில் அமைச்சர்கள் தங்குவதற்கு 14 கோடி ரூபாய் செலவு செய்ததாக அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில் வீடியோவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க திமுக எம்எல்ஏ ஆஸ்டின் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக 40 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய முடியும்.

அதற்கு மீறி செலவு செய்தால் அவர் தகுதி நீக்க செய்யப்பட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது, அதிகபட்சமாக 6 மாத காலம் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் விதிமுறை.
இதன்அடிப்படையில் 14 லட்ச ரூபாய் செலவு செய்ததாக சத்தியபாமா கூறியிருப்பது உண்மையானால் அந்த பணம் கணக்கில் வராமல் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தவெக சார்பில் காமாட்சி விளக்கும், புடவையும் சத்தியபாமா படத்துடன் வீடு வீடாக சென்று கொடுத்துள்ளனர்.
தவெக சார்பில் பணம் கொடுத்ததாக சிபிஎம் சண்முகம் தெரிவித்தார், இதுதொடர்பாகவும் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.